© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன வணிக அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை, சீனாவில் அந்நிய முதலீட்டில் உண்மையாகப் பயன்படுத்தப்பட்ட தொகை 1 இலட்சத்து 15 ஆயிரத்து 609 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 9.9 விழுக்காடு அதிகமாகும். இதில் உயர் தொழில்நுட்பத் துறையிலான அந்நிய முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டை விட 31.1 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் 11 மாதங்களில் தென் கொரியாவின் முதலீடு 122.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல் ஜெர்மனி 52.6 விழுக்காடு, பிரிட்டன் 33.1 விழுக்காடு, ஜப்பான் 26.6 விழுக்காடு அதிகரித்துள்ளன.
தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை இயன்ற அளவில் ஈர்த்து பயன்படுத்த வேண்டும். சீனாவில் உலகளாவிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதியளிக்க வேண்டும் என்று அடுத்த ஆண்டு பொருளாதாரப் பணி குறித்து ஆய்வு செய்தபோது மத்திய பொருளாதார பணி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.